கோயம்புத்தூர்: ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட டாப்ஸ்லிப் கோழிக்கமுத்தியில், இருபத்து எட்டு யானைகள் வனத்துறையினரால் பராமரிக்கப்படுகின்றன. இவற்றில் கலீம், சின்னத்தம்பி, அரிசி ராஜா போன்ற யானைகள் குறிப்பிடத்தக்கவை.
இந்நிலையில் இன்று (ஆக. 12) யானைகள் தினத்தைக் கொண்டாட, ஆனைமலை புலிகள் காப்பக துணைகள இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவிட்டார்.
அதன்படி கோழிக்கமுத்தி, வரகளியாறு ஆகியவற்றில் பராமரிக்கப்படும் வளர்ப்பு யானைகளுக்கு, அந்த பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இதனையடுத்து யானைகளுக்கு சுவைமிக்க உணவுகளை வனத்துறையினர் வழங்கினர். விழாவில் வனச்சரகர் நவீன்குமார், யானை பாகன்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் யானைகள்