காலியாக உள்ள 25 ஆயிரம் கள உதவியாளர் பணியிடங்களை நிரப்பக்கோரி, கோவையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர், மின்வாரியத் தலைமை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மொத்தம் 40 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், 25 ஆயிரம் கள உதவியாளர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்பாமல் பணியில் உள்ள பணியாளர்கள் பெரும் சிரமத்தை சமாளித்து வருவதாகக் கூறினர்.
மேலும் மின் துறை அமைச்சர் தங்கமணி கடந்த ஆண்டில் 2019ஆம் ஆண்டுக்குள் அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும் என்று கூறி, ஒரு வருடம் ஆகிய நிலையில் இன்னும் அது நிறைவேற்றப்படாததால், இன்று கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படுகிறது என்று தமிழ்நாடு மின் ஊழியர்கள் அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் சபாஸ்டின் கூறினார்.
இதையும் படிக்க: உடுமலைப்பேட்டையில் 600கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது!