கோயம்புத்தூர்: மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே அரசுப் போக்குவரத்துப் பணிமனைப் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் முத்துக்குமார் தலைமையில் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியிலிருந்து வந்த கார் ஒன்றை நிறுத்திச் சோதனையிட்டனர்.
காரை ஓட்டிவந்த சதீஷ்குமார் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் இருப்பதை அறிந்து அவற்றைப் பறிமுதல்செய்தனர். முறையான ஆவணம் இல்லாமல் 3.12 லட்சம் ரூபாய் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்செய்த பணத்தை கருமத்தம்பட்டி நகராட்சி ஆணையரிடம் ஒப்படைத்தனர்.
![கோவையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் சோதனை 13 லட்சம் பறிமுதல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-02-money-seized-visu-7208104_05022022151035_0502f_1644054035_878.jpg)
மேலும் பணம் எதற்காகக் கொண்டுவரப்பட்டது என்பது குறித்தும் அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். இதேபோல கோவை சுகுணாபுரம் மைல்கல் சோதனைச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் முத்து தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, வாகனத்தில் வந்த கேரளாவைச் சேர்ந்த கிருஷ்ணமணி என்பவரது வாகனத்தை நிறுத்திச் சோதனையிட்டபோது அதில் 9.50 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் அந்தப் பணத்தைப் பறிமுதல்செய்தனர்.
இதையும் படிங்க: சசிகலா புஷ்பா வழக்கு: படுக்கையறை விவகாரம் - 2ஆவது கணவர் கொடுத்த புகார்