ETV Bharat / state

பன்னிமடையில் யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு - Coimbatore elephant issue

கோவை: பன்னிமடை வனப்பகுதியிலிருந்து வெளியேறிய யானைத் தாக்கியதில் மிதிவண்டியில் சென்ற முதியவர் உயிரிழந்தார்.

கோவை மாவட்ட செய்திகள்  யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு  Elderly man killed by elephant in Pannimadai  elephant attack deaths  Elderly man killed by elephant in Coimbatore  Coimbatore elephant issue  கோவை யானை தாக்கிய உயிரிழப்புகள்
Elderly man killed by elephant in Coimbatore
author img

By

Published : Dec 17, 2020, 9:53 AM IST

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், மாங்கரை, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் தற்போது சோளப்பயிர் அதிகமாகப் பயிரிடப்பட்டுள்ளது. அதன் வாசனை காரணமாக வனப்பகுதியிலிருந்து வெளியேறும் யானைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

யானைகள் ஊருக்குள் புகுவதைத் தடுக்க வனத் துறையினர் ஆல்பா, பீட்டா, காமா என மூன்று சிறப்புப் படைகள் அமைத்து யானைகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். எனினும் உணவிற்காக யானைகள் ஊருக்குள் புகுவது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

யானைகள் முதியவர் மீது தாக்குதல்

இந்நிலையில், நேற்று இரவு (டிச. 16) 9 மணி அளவில் கோவை பன்னிமடை அடுத்த ஸ்ரீ நகர் பகுதியில் மூன்று காட்டு யானைகள் கொண்ட கூட்டம் புகுந்துள்ளது. சோளப்பயிர், வாழை அதிகமாகப் பயிரிடப்பட்டுள்ளதால் மேய்ச்சலுக்கு வந்த யானைகள் சாலையில் மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்த முதியவரை துரத்தி தாக்கியது. இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதைக் கண்ட அவ்வழியாகச் சென்றவர்கள் இது குறித்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் முதியவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பொதுமக்கள் அறிவுறுத்தல்

உயிரிழந்த முதியவர் யார் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் எனக் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "வரப்பாளையம் பன்னிமடை பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

யானைகள் ஊருக்குள் புகுவதைத் தடுக்க வனத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மலையை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில் தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டால் மட்டுமே இதுபோன்ற மனித-மிருகம் மோதலைத் தடுக்க முடியும்” என வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: மூன்று பேர் உயிரிழப்பிற்கு காரணமான ஒற்றை யானையை பிடிக்கும் பணிகள் தீவிரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.