பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் காலனி அருகே உள்ள அன்பு நகர் பகுதியில் முதியோர் இல்லம் செயல்பட்டுவருகிறது. கிணத்துக்கடவு அருகே உள்ள கக்கடவுவைச் சேர்ந்த திருமூர்த்தியின் மகன் பழனிச்சாமி என்பவர் கடந்த ஒரு மாதமாக முதியோர் இல்லத்தில் இருக்கிறார்.
இவருக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். சில தினங்களுக்கு முன்பு இவரது துணைவியார் இறந்ததால் இவர் தனிமையில் இருந்துவந்த நிலையில் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று (ஏப். 18) மாலை முதியோர் இல்லம் அருகில் உள்ள பகுதியில் இயற்கை உபாதையைக் கழிக்கச் செல்லும்போது அங்கு புதரில் மறைந்திருந்த காட்டுப்பன்றி ஒன்று அதிவேகமாக வந்து முதியோரைத் தாக்கியதில் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சைப் பெற்றுவருகிறார். இச்சம்பவம் குறித்து வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!