கோவை மாவட்ட பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த வர்ணம் பூசும் தொழிலாளி சபு(51). இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு பொள்ளாச்சியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சபு மீது புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல் துறையினர், சபுவை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில் சபு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்ததையடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல் துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:மகளுக்குத் தேர்தலில் வாக்களித்த அடித்த நொடியே இறந்த தந்தை!