ETV Bharat / state

8 வயது சிறுமிக்கு டாக்டர் பட்டம்!

கோயம்புத்தூரைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

author img

By

Published : Dec 5, 2021, 6:21 PM IST

Eight year old girl recieved doctrate  small girl from coimbatore recieved doctrate  coimbatore girl recieved doctrate  Eight year old girl recieved doctrate from international unicef council  எட்டு வயது சிறுமிக்கு டாக்டர் பட்டம்  டாக்டர் பட்டம் பெற்ற கோயம்புத்தூர் சிறுமி  சர்வதேச யுனிசெப் கவுன்சிலிடம் இருந்து டாக்டர் பட்டம் பெற்ற கோயம்புத்தூர் சிறுமி
சிறுமிக்கு டாக்டர் பட்டம்

கோயம்புத்தூர்: கோவைப்புதூர் பகுதியைச் சேர்ந்த கவுரிஉதயேந்திரன் - விப்ரஜா தம்பதியின் மகள் பிரகதி (8).

பிரகதி அதே பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

தனது மூன்று வயது முதலேயே சிலம்பம் மற்றும் குங்பூவில் ஆர்வமுடன் ஈடுபட்ட இவர், தற்போது சர்வதேச அளவில் சிலம்பம், இரட்டைச் சுருள்வாள் வீச்சு, கம்புச் சண்டை, கம்பு ஜோடி எனப் பல்வேறு பிரிவுகளில் தங்கம், வெள்ளி எனப் பல்வேறு பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளார்.

சிறு வயதிலேயே பல சாதனைகள் புரிந்த காரணத்தினால் இச்சிறுமியை சர்வதேச யுனிசெப் கவுன்சில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்து உள்ளது.

இந்நிகழ்ச்சியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சர்வதேச யுனிசெப் கவுன்சில் தூதர் டாக்டர் வேலன்ட்டினா பேட்ரிஸ், சிறுமி பிரகதிக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார்.

இதையும் படிங்க: நூலகத்திற்கென ஒரு பாடவேளை கட்டாயம்; பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.