மத்திய அரசு மின் வாரியத்தை தனியார் நிறுவனத்திடம் வழங்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனைக் கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் பலமுறை போராட்டங்களை நடத்திவந்தனர்.
கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்ததால் எவ்வித ஆர்ப்பாட்டமும் நடைபெறாத நிலையில் ஊரடங்கு தளர்வு அறிவித்த முதல் நாளிலேயே நேற்று 500க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மின்சார வாரியத்தை தனியார் நிறுவனத்திடம் வழங்கும் போக்கை மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் கைவிட வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை டாடாபாத்தில் உள்ள மைய மின்வாரியம், குனியமுத்தூர், பார்க் கேட் போன்ற இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் முகக்கவசங்கள் அணிந்து மத்திய, மாநில அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: ஆர்ப்பாட்டம் செய்த வடமாநிலத்தவர்கள்: விரட்டிப் பிடித்த போலீஸ