ETV Bharat / state

அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ஆதரவாக அரசு செயல்படவில்லை - அமைச்சர் துரைமுருகன் - Minister Duraimurugan

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாக திமுக செயல்படுவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

பொன்னையன் பைத்தியக்காரன் மாதிரி பேசுகிறார்- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

author img

By

Published : Jul 15, 2022, 10:54 AM IST

கோயம்புத்தூர்: சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் பவானி பாசன விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்க பிரதிநிதிகள் உடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளரிடம் துரைமுருகன் பேசினார். அப்போது முதல்வரின் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்தவர் ”நேற்று காலையும் மாலையும் முதல்வர் வீட்டில் இருப்பவர்களிடம் பேசினேன், முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அட்மிட் ஆனது கூறி குறித்து சிறிது நேரத்துக்கு முன்புதான் தெரிவித்தார்கள்” வீட்டில் இருந்தால் ஏதாவது இடையூறு இருக்கும் என்பதால் அட்மிட் ஆகி இருப்பார். மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் மூன்று கரோனா தடுப்பு ஊசிகளும் செலுத்திக் கொண்டுள்ளார் எனவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர் கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் அமைப்பு தொடர்பாக கலந்துரையாடல் நடத்தப்பட்டது. விவசாயிகள் இடையே இரு விதமான கருத்துக்கள் இருக்கிறது ஆதரவாக ஒரு தரப்பும் எதிராக ஒரு தரப்பும் இருக்கின்றனர். விவசாயிகளிடம் பேசியிருக்கிறோம். அடுத்த முறை அமர்ந்து பேசினால் இந்த பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும் என தெரிவித்தார்.

பொன்னையன் பைத்தியக்காரன் மாதிரி பேசுகிறார்- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

மேலும் அதிமுகவைச் சேர்ந்த முனுசாமிக்கு குவாரி வழங்கப்பட்டதாக பேசி இருப்பது குறித்த கேள்விக்கு முனுசாமியின் குவாரிக்கு நாங்கள் ஒரு முறை சீல் வைத்திருக்கிறோம். போன மாதம் புதிதாக 20 குவாரிகள் டெண்டர் விட்டதில் அதிகபட்ச தொகை செலுத்தி முனுசாமி எடுத்திருக்கிறார் பொன்னையன் முன்மாதிரி இல்லை. ஒரு மாதிரி ஆகிவிட்டார் என தெரிவித்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாக திமுக செயல்படுவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை எனவும் அரசியலில் இது மாதிரி சொல்றது வழக்கம் தான் எனவும் திமுக பொதுச்செயலாளரும் நீர்ப் பாசனத் துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஈபிஎஸ் தரப்பினரால் பொன்னையன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது - புகழேந்தி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.