கோயம்புத்தூர்: கோவை - மேட்டுப்பாளையம் இடையேயான மெமோ ரயில் நேற்று (செப். 27) மாலை கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது துடியலூர் - பெரியநாயக்கன்பாளையம் இடைப்பட்ட பகுதியில் தண்டவாளத்தில் ஒருவர் படுத்திருப்பதைக் கவனித்த ரயில் ஓட்டுநர் சத்தமாக ஒலி எழுப்பியுள்ளார்.
ஒலி எழுப்பியும் அந்த நபர் அங்கிருந்து செல்லாததால் ஓட்டுநர் ரயிலை நிறுத்த முற்பட்டபோது, ரயில் பெட்டி தண்டாவாளத்தில் படுத்திருந்த நபரை சற்று கடந்துசென்று நின்றது.
அதிர்ச்சியடைந்த பயணிகள், ஊழியர்கள் ரயிலிருந்து இறங்கிப் பார்த்தபோது அந்த நபர் மதுபோதையில் தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போதை ஆசாமியை தண்டவாளத்திலிருந்து வெளியேற்றினர்.
ரயில் பெட்டி அவரை கடந்துசென்றும் நல்வாய்ப்பாக எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினார். இச்சம்பவத்தை ரயில் பயணி ஒருவர் காணொலி பதிவு செய்துள்ளார். தற்போது அந்தக் காணொலி வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: செய்தியாளர் வீட்டில் 15 பவுன் தங்க நகைகள், ரூ. 60 ஆயிரம் கொள்ளை