கோவை கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் போதை பொருள் விற்பனை செய்து வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தொடர்ச்சியாக புகார் வந்துள்ளது.
அதன்பெயரில் மாவட்டம் முழுவதும் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று ரோந்து பணியின்போது, கேரள மாநிலத்தைச் சேர்ந்த முகமது இர்ஃபான் என்ற மாணவர் சந்தேகிக்கும் வகையில் கையில் பையுடன் அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.
அவர் மீது சந்தேகமடைந்த போலீசார், அவரது கைப்பையை சோதனை செய்தனர். அதில், MDMA எனப்படும் போதை பொருள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் தங்கியிருந்த அறைக்கு அழைத்துச் சென்ற போலீசார், சோதனை மேற்கொண்டனர். சோதனையில் முகமது வீட்டிலிருந்து கஞ்சா உள்ளிட்ட போதையூட்டுதம் பொருள்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அதே அறையில் தங்கி இருந்த அவரது நண்பர் ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.