ETV Bharat / state

பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட வாகன ஓட்டுநர்கள்

கோயம்புத்தூர்: 2021ஆம் ஆண்டு வரை வாகன காப்பீடு கட்டணம் வசூலிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

author img

By

Published : Jun 9, 2020, 5:44 PM IST

begging protest
Drivers begging protest in Coimbatore

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 50 க்கும் மேற்பட்ட மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ”அனைத்து வாகன கடன்களுக்கான ஆறு மாத தவணை வட்டியை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும், 2021 ஆம் ஆண்டு வரை வாகன காப்பீடு கட்டணத்தை வசூல் செய்யக்கூடாது, வாகனத்திற்கான தரச் சான்றிதழை பெறுவதற்கு வாகனங்களில் பொருத்தி உள்ள வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் மூலம் தர சான்றிதழை வழங்க வேண்டும்,

பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட வாகன ஓட்டுனர்கள்

நவீன முறையில் படம் பிடித்து பணம் பறிக்கும் காவல்துறையின் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும், கரோனா வைரஸ் காலத்தில் நிவாரணமாக மாதம் 7 ஆயிரத்து 500 ரூபாய் அனைத்து ஓட்டுநர்களுக்கும் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும், வாகனங்கள் இயங்காத காலத்தில் வரிகளை கேட்கக்கூடாது,

ஊரடங்கு முடியும்வரை வாகனங்களுக்கான பெரிமிட், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் போன்றவற்றில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக வாகனங்களை இயக்கி விபத்தில் மரணமடைந்த ஓட்டுநர்களுக்கு 10 லட்சமும் எலும்பு முறிவு போன்றவை ஏற்பட்டவர்களுக்கு 5 லட்சமும் உடனடியாக அரசு வழங்கிட வேண்டும்” போன்ற கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: ஊரடங்கு விதி மீறல் : 11 கோடியை கடந்த அபராதத் தொகை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.