கோவை மாநகர் கவுண்டம்பாளையம் சேரன் நகரில் மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளை தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "
பிரதமர் மோடி உலக அளவிலான தலைவராக உருவெடுத்து உள்ளதாகவும் , 52 நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்து உலக அரங்கில் இந்தியாவிற்கு பாராட்டுக்களை பெற்று கொடுத்துள்ளார் என்றார்.
இலவச கேஸ் இணைப்பு, இலவச கழிப்பறை, ஆவாஸ் யோஜனா, முத்ரா திட்டம், சாலை வியாபாரிகளுக்கான கடன் திட்டம் என கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து இதுவரை தேசம் கண்டிராத சிறப்பான பிரதமராக மோடி திகழ்வதாக கூறினார்.
பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ள போதிலும் , தமிழ்நாட்டில் திமுக அரசு விலையை குறைக்காமல் வெறும் குற்றம் மட்டுமே சாட்டி வருகிறது; திமுக ஒரு குடும்ப கட்சி என்றும் பாஜக சேவை கட்சி என்றும் குறிப்பிட்ட அவர் கோயில்களை இடிப்பது தான் திராவிட மாடலா என கேள்வி எழுப்பினார்.
திமுக ஆட்சியில் கூலிப்படை, ரவுடிசம் அதிகரித்துள்ளது எனவும் காவல்துறையினரை தவறாக பயன்படுத்தும் அரசாக உள்ளது எனவும் சுதாகர் ரெட்டி குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: மிஸ்டு காலில் கட்சி நடத்துபவர்கள் எப்பொழுதும் எதிர்க்கட்சியாக ஆக முடியாது - கி.வீரமணி