கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய ஆட்சிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட ஈஸ்வரன் என்பவர் விருப்பம் தெரிவித்தார். இது தொடர்பாக திமுகவைச் சேர்ந்த பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் மருதவேலை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது, ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட ஈஸ்வரனிடம் 30 லட்ச ரூபாய் பேரம் பேசினார்.
மேலும், திமுக மாவட்ட செயலாளர் செல்வராஜ், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோருக்கு பணம் வழங்க வேண்டும் என்றும் மருதவேல் கேட்டுக்கொண்டார். இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பொள்ளாச்சி வடக்கு, தெற்கு ஊராட்சிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஆட்சிபட்டி ஈஸ்வரன் கூறுகையில், திமுகவினர் பணம் கேட்டது உண்மைதான். நான் பணம் தர மறுத்ததால் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மகேஸ்வரி என்பவரை போட்டியிட வைத்தனர். அதன்பிறகு ஒன்றிய செயலாளர் மருதவேல், பணத்தை பெற்றுக்கொண்டு தேர்தல் பணிக்கு வரவில்லை, என்றார். மேலும், திமுக தோல்விக்கு மருதவேல் தான் காரணம் என ஈஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: 'வி.ஏ.ஓ. என்றால் வெட்டி ஆபிஸர்' - கொந்தளித்த விவசாயி!