கோவை மாநகராட்சிப் பகுதியில் 'சூயஸ்' என்ற பன்னாட்டு நிறுவனம் இயங்கிவருகிறது. சில மாதங்களுக்கு முன்பு மத்திய, மாநில அரசு இணைந்து மக்களுக்கு 24 மணி நேர குடிநீர் வழங்க அந்நிய நிறுவனமான சூயஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. இந்த நிறுவனம் தற்போது 100 விழுக்காடு வரி உயர்வு ஏற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை எதிர்த்து சூயஸ் நிறுவனத்தை வெளியேற்ற வேண்டுமென அனைத்துக் கட்சியினர் பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டுவந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி கறுப்புச் சட்டை அணிந்தும் கடைகளை அடைத்தும் போராட்டம் நடத்த திமுக, அனைத்து கட்சியினர் முடிவு செய்தனர். ஆனால் அரசு அதற்கு தடை விதித்தது அதனை தொடர்ந்து இன்று அப்போராட்டம் நடைபெற்றது. சூயஸ் நிறுவனத்தை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் 400-க்கும் மேற்பட்டவர்கள் கறுப்புச் சட்டை அணிந்து தமிழ்நாடு அரசையும் சூயஸ் நிறுவனத்தையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தின்போது பேசிய திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திக் கூறுகையில், “வெளிநாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு குடிநீர் விநியோகம் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது மக்களுக்கு பெரும் பண நெருக்கடியை ஏற்படுத்தும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: குடிநீர் வழங்காததைக் கண்டித்து காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்