பொள்ளாச்சியில் கோயம்புத்தூர் புறநகர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக தெருமுனை பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.
அம்மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் பேருந்து நிலையம், மகாலிங்கபுரம் ரவுண்டானா, திருவள்ளுவர் திடல் பகுதிகளில் நடந்த இக்கூட்டத்தில் மாநில மகளிர் அணி பரப்புரை குழு செயலாளர் சேலம் சுஜாதா, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியையும், முதலமைச்சரையும் கடுமையாக சாடினார்.
அப்போது, ராஜேந்திர பாலாஜி மற்றும் முதலமைச்சர் பழனிசாமியையும் அவதூறான வார்த்தைகளால் திட்டியும், அவரது சொந்த ஊரிலேயே பரப்புரையில் ஈடுபட போகிறேன். துணிவிருந்தால் அங்கே வந்து நேருக்கு நேர் விவாதம் செய்ய தயாரா என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சிக்க உங்களுக்கு தகுதியில்லை. முதலமைச்சர் வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் என விமர்சித்தார்.
இதையும் படிங்க: மத்திய அரசு நல்லது செய்தாலும் எதிர்க்க வேண்டும் என்பதே கமல் ஹாசனின் எண்ணம் - எல். முருகன் சாடல்