ETV Bharat / state

'கரோனா பரிசோதனை உபகரணங்கள் வழங்க மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது' - நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் கரோனா நிவாரண நிதி

கோவை: கரோனா நோய்த் தடுப்பு, பரிசோதனை உபகரணங்களை தமிழ்நாட்டுக்கு வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்று பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் தெரிவித்தார்.

dmk mp sanmugasundaram gives relief fund to pollachi people

author img

By

Published : Apr 18, 2020, 8:10 PM IST

பொள்ளாச்சி நகர திமுக சார்பில் நகர பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜ் ஏற்பாட்டில், கோவை புறநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்கள் வசிக்கும் 300 குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.16 லட்சம் மதிப்புள்ள அரிசி, பருப்பு, காய்கறிகள், நோய்த்தடுப்பு உபகரணங்கள் இன்று வழங்கப்பட்டது.

இதில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் கலந்து கொண்டு பொருள்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து முகக்கவசங்கள், கிருமி நாசினியை மாநில விவசாய அணி துணைத் தலைவர் தமிழ்மணி வழங்கினார்.

கரோனா நிவாரண நிதி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சண்முகசுந்தரம், 'இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 60 நாள்களுக்கும் மேலாகியும்; மத்திய அரசு சார்பில் தமிழ்நாட்டுக்கு குறிப்பாக கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிகமானவர்கள் வைரஸ் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டு உள்ளதால் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு அதிகப்படியான ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டிய நிலை உள்ளதால், விரைவில் ரத்தப் பரிசோதனை செய்யும் 50,000 ரேபிட் டெஸ்ட் கருவிகளை உடனடியாக வழங்க வேண்டும். நோய்த் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சம் நிலவி வருவதால், அந்த அச்சத்தைப் போக்கும் வகையில், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது' என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம்

இதையும் படிங்க...மருத்துவ உபகரணங்களை ஏற்றிவரச் சீனா சென்றுள்ள ஏர் இந்தியா விமானம்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.