ETV Bharat / state

'மேட்டுப்பாளையம் விபத்து போல் கோவையில் நடந்து விடக்கூடாது' - எச்சரித்த திமுக எம்எல்ஏ

கோவை: சிங்காநல்லூர் பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஹவுசிங் யூனிட் குடியிருப்புகளின் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்எல்ஏ கார்த்திக் தெரிவித்துள்ளார்.

dmk-mla-karthick-pressmeet
dmk-mla-karthick-pressmeet
author img

By

Published : Dec 11, 2019, 4:25 PM IST

இதுதொடர்பாக வடகோவை திமுக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கார்த்திக் பேசுகையில், ' கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள 960 ஹவுசிங் யூனிட் குடியிருப்புகள் 35 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்பட்டன. தற்போது அந்த குடியிருப்பு வீடுகளில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இந்தப் பிரச்னை குறித்து மூன்றாண்டுகளுக்கு முன்பே சட்டப்பேரவையில் நான் தெரிவித்தேன். ஆனால், அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த வாரம் மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். அதேபோன்ற சம்பவங்கள் கோவையிலும் நடைபெறக் கூடாது. எனவே சிங்காநல்லூர் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டு வசதி வாரியம் மூலம் அரசு புதிய வீடுகள் கட்டித் தரவேண்டும்.

திமுக எம்எல்ஏ கார்த்திக் செய்தியாளர் சந்திப்பு

மூன்று ஆண்டுகள் இது குறித்து பேசியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், வருகின்ற 13ஆம் தேதி திமுக சார்பில் சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற முடிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார்.

இதையும் படிங்க: 17 உயிரிழப்புகள் கூட ஆட்சியாளர்களின் கல் மனதைக் கரைக்கவில்லை’ - ஸ்டாலின் காட்டம்!

Intro:இடிந்து விழும் நிலையிலுள்ள சிங்காநல்லூர் ஹவுசிங் யூனிட் குடியிருப்புகளின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக எம்எல்ஏ நான் கார்த்திக் வலியுறுத்தல்

Body:வட கோவையில் உள்ள திமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சிங்காநல்லூர் திமுக எம்எல்ஏ கார்த்திக் பேசும் போது

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஹவுசிங் யூனிட் குடியிருப்புகளை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறினார். அப்பகுதியில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் 960 வீடுகள் கட்டப்பட்டன என்றும் தற்போது அதில் இன்னொரு க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன என்றும் தெரிவித்தார் இதுகுறித்து மூன்றாண்டுகளுக்கு முன்பே சட்டப்பேரவைத் தான் தெரிவித்ததாகவும் ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார் கடந்த வாரம் மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியாகி உள்ளனர் என்றும் இதுபோன்ற சம்பவங்கள் கோவையிலும் நடைபெறக் கூடாது என்றும் தெரிவித்தார் அதுபோன்ற சம்பவங்கள் சிங்காநல்லூர் பகுதியில் நடைபெறாமல் இருக்க வேண்டுமேயானால் உடனடியாக வீட்டு வசதி வாரியம் புதிய வீடுகள் கட்டித் தரவேண்டும் என்றும் கூறினார் மூன்று ஆண்டுகள் இது குறித்து பேசியும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் வருகின்ற 13 ஆம் தேதி திமுக சார்பில் சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற முடிவு செய்துள்ளதாகவும் கூறினார் மேலும் தற்போது உள்ள அரசு ஆட்சியாளர்கள் குறிப்பாக இருக்கின்றனரே தவிர மக்களுக்கு போய் சேர வேண்டும் வளர்ச்சி பணிகளை செய்து தரவேண்டும் என்று யாரும் இல்லை என்று கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.