ETV Bharat / state

திமுக முன்னாள் எம்.பி. மரணம்!

கோவை: திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும், கோவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான  மு. இராமநாதன் இன்று அதிகாலை காலமானார்.

மு. இராமநாதன்
author img

By

Published : May 10, 2019, 10:27 AM IST

Updated : May 10, 2019, 12:06 PM IST

கோவை பகுதியைச் சேர்ந்தவர் மு. இராமநாதன் (87). திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினராகவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இவர் கடந்த இரண்டு வருடங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சைப் பலனின்றி காலமானர்.

இவரது உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை நேரில் வந்து அஞ்சலி செலுத்துகிறார். திமுகவில் பல்வேறு பொறுப்புகள் வகித்த இவர் 1996ஆம் ஆண்டு முதல் 1998வரை கோவை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

கருணாநிதியின் நன்மதிப்பைப் பெற்ற இவர் அக்கட்சியில் நீண்ட நாட்களாக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மு.இராமநாதன் மறைவையொட்டி இன்று முதல் மூன்று நாட்களுக்கு திமுக கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறும், திமுக நிகழ்ச்சிகளை ஒத்தி வைக்குமாறும் கட்சியின் தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.

சு.சீனிவாசன்.       கோவை

கோவையில் தி.மு.க கழக உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினரும்,ங முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான  கோவை மு.இராமநாதன் அதிகாலை காலமானார். அவரது உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று அஞ்சலி செலுத்துகின்றார்.

கோவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் , திமுக செயல் திட்ட உறுப்பினருமான மு.இராமநாதன் கடந்த இரு வருடங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலயே சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் மு.இராமநாதன் காலமானார்.அவருக்கு வயது 87.இவர் 96 முதல் 98 ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த மு.இராமநாதன் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். கோவை தென்றல் என்று திமுகவினரால் அழைக்கப்படும் மு.இராமநாதன் கோவை திமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவர். கலைஞரிடம் நன்மதிப்பை பெற்று இருந்த மு.இராமநாதன் நீண்டகாலமாக உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினராக இருந்து வந்தார். இன்று காலை 11.30 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இறந்த  மு.இராமநாதன் உடலுக்கு அஞ்சலி  கோவை வருகின்றார்.
Last Updated : May 10, 2019, 12:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.