ETV Bharat / state

கடத்தல் வழக்கில் முன்னாள் திமுக கவுன்சிலர் கைது! - கடத்தல் வழக்கு

பொள்ளாச்சியில் பைனான்சியரை கடத்திய வழக்கில் முன்னாள் திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், தலைமறைவான நான்கு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

DMK ex- counselor arrested for kidnap case

author img

By

Published : Oct 15, 2020, 5:32 PM IST

Updated : Oct 15, 2020, 5:37 PM IST

பொள்ளாச்சி சி.டி.சி காலனியைச் சேர்ந்தவர் சாந்தகுமார். பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவர் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கோட்டூர் ரோடு மேம்பாலம் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார்.

கடத்தல்காரர்கள் ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டி சாந்தகுமாரை தாமரைக்குளம் பகுதியில் அடைத்து வைத்திருந்தனர். அவர் பணம் தர மறுக்கவே, அவரை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

இதையடுத்து, சாந்தகுமார் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், 26ஆவது வார்டு திமுக முன்னாள் கவுன்சிலர் கமலக்கண்ணன் உள்பட ஐந்து பேர் சாந்தகுமாரைக் கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து கவுன்சிலர் கமலக்கண்ணன், நவீன் குமார் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள நான்கு பேரை தேடி வருகின்றனர்.

Last Updated : Oct 15, 2020, 5:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.