ETV Bharat / state

'கொடநாடு கொலை பற்றி பேசும் ஸ்டாலினால் சாதிக் பாட்ஷா சாவு குறித்து கூற முடியுமா?'

கோவை: கொடநாடு கொலை சம்பவம் குறித்து விமர்சித்துவரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையின்போது தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சாதிக் பாட்ஷா எவ்வாறு உயிரிழந்தார் என்ற உண்மையை கூற முடியுமா? என பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த்
author img

By

Published : Mar 29, 2019, 8:45 AM IST

பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளர்மகேந்திரனை ஆதரித்து கோவை செல்வபுரம் பகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

பொள்ளாச்சி வழக்கில் தொடர்புள்ள காங்கிரஸ், திமுக நிர்வாகிகளுக்கு அழைப்பாணைஅனுப்பியும், அவர்கள் ஆஜராகவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பான அரசாக இந்த அதிமுக கூட்டணி அரசு இருக்கும். பெண் பிள்ளைகளை தன்னம்பிக்கையுடன் வளர்க்க வேண்டும்.

துணிச்சல் மற்றும் தைரியத்திற்கு உதாரணமாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தார். அவரைப் போன்று நிர்வாக திறமையுடன் துணிச்சலுடன் பெண்களை வளர்க்க வேண்டும். திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய மாநில அரசுகளின் மீது சுட்டிக்காட்டும் அளவிற்கு எந்த குறையும் இல்லாததால், வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என கூறியதையே திரும்பத் திரும்ப கூறிவருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், 'கொடநாடு கொலை சம்பவம் குறித்துவிமர்சித்துவரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பான விசாரணையின்போது தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சாதிக் பாட்ஷா எவ்வாறு உயிரிழந்தார் என்ற உண்மையை கூற முடியுமா?' என்றுகேள்வி எழுப்பியுள்ளார்.

சு.சீனிவாசன்.      கோவை 

கோடநாடு கொலை சம்பவம் குறித்து  விமர்சித்து வரும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பான விசாரணையின் போது தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சாதிக் பாஷா எவ்வாறு உயிரிழந்தார் என்ற உண்மையை கூற முடியுமா என பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளரான மகேந்திரனை ஆதரித்து கோவை செல்வபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரேமலதா விஜயகாந்த், அதிமுக பாஜக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி இருப்பதாகவும் திமுக-காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என துணிந்து சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் மம்தா பானர்ஜியா ராகுல் காந்தியா பிரியங்காவா என கேட்ட பிரேமலதா, நாட்டின் வலுவான பிரதமராக மோடி இருப்பதாகவும் சர்வதேச தரத்தில் இந்தியாவை தலைநிமிர வைத்தவர் மோடி எனவும் குறிப்பிட்டார். பொள்ளாச்சி பாலியல் சம்பவம் மற்றும் கோவை சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி பொள்ளாச்சி வழக்கில் காங்கிரஸ்,திமுக நிர்வாகிகளுக்கு தொடர்பு உள்ளதாக சம்மன் அனுப்பப்பட்டதாகவும் ஆனால் அவர்கள் ஆஜாராகவில்லை எனவும் குற்றம்சாட்டினார். பெண்களுக்கு பாதுகாப்பான அரசாக இந்த அதிமுக கூட்டணி அரசு இருக்கும் எனவும் பெண் பிள்ளைகளை  தன்னம்பிக்கையுடன் வளர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்திய அவர், துணிச்சல் மற்றும் தைரியத்திற்கு உதாரணமாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்ததாகவும் அவரைப் போன்று நிர்வாக திறமையுடன் துணிச்சலுடன் பெண்களை வளர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.தொடர்ந்து பொள்ளாச்சி தொகுதியில் தற்போது பாராளுமன்ற உறுப்பினராக உள்ள மகேந்திரன் செய்துள்ள திட்டங்களை மேற்கோள் காட்டி தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். திமுக தலைவர் ஸ்டாலின் சுட்டிக்காட்டும் அளவிற்கு எந்த குறையும் இல்லாததால் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என கூறியதையே திரும்பத் திரும்ப கூறி வருவதாகவும் கொடநாடு கொலை சம்பவம் குறித்து விமர்சித்து வரும் ஸ்டாலின் சாதிக் பாஷா எவ்வாறு உயிரிழந்தார் என்ற உண்மையை கூற துணிவிருக்கிறதா எனவும் கேள்வி எழுப்பினார்......
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.