கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள புளியம்பட்டி தனியார் கல்லூரியில் கோவை தெற்கு மாவட்ட அளவில் கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பொள்ளாச்சி கிணத்துக்கடவு ஆனைமலை வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் எடை மற்றும் வயது அடிப்படையில் பிரிக்கப்பட்டு ஜூனியர், சப் ஜூனியர், சீனியர், சப் ஜூனியர் என நான்கு பிரிவுகளில் பிரிக்கப்பட்டு தனிநபர் தனது தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் தனி நபர் போட்டி மற்றும் இருவர்கள் கலந்து கொண்டு சண்டையிடும் போட்டி என இரு பிரிவுகள் நடைபெற்றது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம் வெள்ளி பித்தளை என பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது இந்த போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் பெற்றவர்கள் மார்ச் மாதம் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி உள்ளவர்கள் என போட்டி ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சிவகங்கை அருகே ரேக்ளாவில் சீறிப் பாய்ந்த காளைகள்