ETV Bharat / state

கோவையில் கூடுதல் கட்டணம் வசூலித்த ஹோட்டலுக்கு அபராதம்: சாப்பாடு பார்சல் வாங்குகிறீர்களா? இதை முதல்ல கவனிங்க..! - கூடுதல் கட்டணம் வசூலித்த ஹோட்டலுக்கு அபராதம்

கோவையில் சாப்பாடு பார்சல் கட்டுவதற்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததாகவும், ஹோட்டலின் விளம்பரத்திற்காக தன்னை பயன்படுத்தியதாகவும் சட்டக் கல்லூரி மாணவர் தொடுத்த வழக்கின் அடிப்படையில், தனியார் ஹோட்டலுக்கு நுகர்வோர் நீதிமன்றம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2023, 8:48 PM IST

சேக் முகமது

கோவை: கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் சேக் முகமது(34). இவர் கோவை சட்டக்கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் வடவள்ளி பகுதியில் உள்ள ஆனந்தாஸ் என்ற பிரபல தனியார் உணவகத்தில், பிரைடு ரைஸ் உணவு வாங்கியுள்ளார். அதன் விலை ரூ.160 ஆக இருந்த நிலையில், பார்சல் செய்து கொடுத்த கண்டைனருக்கு ரூ.5.71 கூடுதலாக கட்டணம் வசூல் செய்துள்ளனர்.

ஆனால், கண்டைனரில் அந்த உணவகத்தின் பெயர் இலச்சினை (LOGO) இடம் பெற்றிருந்தது. உணவு பார்சல் கொடுத்த கண்டைனருக்கு கட்டணம் வசூல் செய்த நிலையில், அதில் உள்ள அவர்களது நிறுவன லோகோ மூலம் தன்னை விளம்பர ஏஜென்டாக பயன்படுத்தியதாகவும், இது தொடர்பாக விளக்கம் கேட்டு சேக் முகமது அந்த தனியார் உணவகத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், அந்நிறுவனம் சார்பில் எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், சேக் முகமது கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

கடந்த ஓராண்டாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில் அந்த தனியார் உணவகம், வாடிக்கையாளர்களுக்கு உணவு பார்சல் கொடுக்கும் கண்டைனரில் உணவகத்தின் லோகோ-வை பயன்படுத்தக்கூடாது என நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும் வாடிக்கையாளரான சேக் முகமதுக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்கு செலவீனம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி தவறு இருப்பின் கேள்வி கேளுங்கள்: இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சேக் முகமது, 'பெரும்பாலான உணவகங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயரை பார்சல் கொடுக்கும் கண்டைனர் மற்றும் பைகளில் விளம்பரமாக கொடுப்பதோடு வாடிக்கையாளர்களை விளம்பர பிரதிநியாக பயன்படுத்துவதாகவும், அதற்காக பார்சல் கட்டணம் என வாடிக்கையாளரிடம் கூடுதல் தொகை வசூலிக்கபடுவதாகவும் இனி அப்படி செய்ய முடியாது. ஆகவே இந்த நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி உணவகத்தில் கேள்வி கேட்கலாம்' என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நெல்லையில் காதலை கைவிட மறுத்த இளம்பெண் ஆணவக் கொலை.. தம்பி செய்த வெறிச்செயல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.