கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, "பொள்ளாச்சி பாலியல் பிரச்னை கடந்த 2019ஆம் ஆண்டு நிரூபணம் ஆனது. சிபிஜ அதை உறுதி செய்தது.
சென்ற இரண்டு வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட நபர் அதிமுக பிரமுகர்களுடன் தொடர்பில் உள்ளார். அவர் கைதாவதற்கு முன்பு நகரில் ஒட்டப்பட்ட அனைத்து விளம்பரங்களும் அதற்கு சாட்சி.
ஆகவே பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்னும் அதிமுகவினர் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்ற சந்தேகம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. விரைவில் திமுக ஆட்சி அமைந்தவுடன் பொள்ளாச்சி வழக்கில் இன்னும் பல முக்கிய புள்ளிகள் கைதாவார்கள்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொள்ளாச்சி வழக்கில் தேர்தலுக்காக அரசியல் செய்ய கூடாது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி