தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை வீசி வரும் நிலையில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மளிகை கடைகள், காய்கறி கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு மளிகை பொருட்கள்,காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்திலும் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் அறிவித்திருந்தார். இந்நிலையில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மளிகை பொருட்களை வினியோகம் செய்வதற்காக வினியோகஸ்தர்கள் ரங்கே கவுண்டர் வீதியில் உள்ள 50க்கும் மேற்ப்பட்ட மளிகை கடைகளில் பொருட்களை வாங்கி பொதுமக்களுக்கு விற்பனை செய்தனர்.
ஆனால் பல்வேறு கடைகளில் மளிகை பொருட்களை அதிக விலைக்கு கடைக்காரர்கள் விற்பனை செய்வதாகவும், இதனால் குறைந்த அளவிலான மளிகை பொருட்களை வாங்கி மக்களுக்கு வினியோகம் செய்யும் நிலை ஏற்ப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் அனைவருக்கும் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வினியோகஸ்தர்கள் சிலர் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி