கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் கரோனா பேரிடர் காரணமாக மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
இதற்கென தனியாக கரோனா நிவாரண நிதி என ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்களும், தனியார் தொண்டு நிறுவனங்களும் நன்கொடை வழங்கி வருகின்றனர்.
நிவாரண நிதி
இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய பார்வையற்றோர் இணையம் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதியாக 25,000 ரூபாய் ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ளது.
இதனை அதன் ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் வழங்கினார். இந்நிகழ்வில் மாநில துணைத்தலைவர் ஜெமினி சின்ன கண்ணன், செயலாளர் சரவண மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: 'எழுத்துகளை மத கண்ணாடி கொண்டு பார்க்கக் கூடாது' - முதலமைச்சர்