கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிகப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாயவிலைக் கடைகளில் ரூ. 1000, அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தது.
இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி நாகராட்சிக்கு உட்பட்ட 18வது வார்ட்டில் உள்ள நியாவிலைக் கடையில் ஏப்ரல் 3ஆம் தேதி சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டு கரோனா நிவாரணப்பொருள்கள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், சட்டப்பேரவையில் நடந்த மானிய கோரிக்கையின் போது திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளிநடப்பு செய்வதில் குறியாக இருந்தார். நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திமுகவினர் எதையும் பேசவில்லை. ஆனால் தற்போது அதிமுகவினர் களத்தில் பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.