ETV Bharat / state

அதிமுகவில் என்ன பிரச்சனை இருந்தால் திமுகவிற்கு என்ன?: தமாகா யுவராஜா

அதிமுகவில் என்ன பிரச்னையாக இருந்தாலும் திமுகவிற்கு என்ன? அண்ணாமலை ரூ.3 1/2 லட்சம் வாட்ச் கட்டினால் என்ன? ரூ.5 லட்சம் வாட்ச் கட்டினால் என்ன? என தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணித் தலைவர் யுவராஜா தெரிவித்தார்.

அதிமுகவில் என்ன பிரச்சனை இருந்தால் திமுகவிற்கு என்ன?: காங்கிரஸ் யுவராஜா

author img

By

Published : Dec 20, 2022, 8:30 PM IST

அதிமுகவில் என்ன பிரச்சனை இருந்தால் திமுகவிற்கு என்ன? அண்ணாமலை எவ்வளவு லட்சத்திற்கு வாட்ச் கட்டினால் என்ன? தமாகா யுவராஜா கேள்வி

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, ஆகியவற்றை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கோவை மாவட்ட இளைஞரணி சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜா, "வருகின்ற நாட்களில் கொங்கு மண்டலத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க உள்ளோம். திமுக அரசு பொய்யான வாக்குறுதிகளால் தற்பொழுது ஆட்சிக்கு வந்துள்ளது. குறிப்பாக நீட் தேர்வு ரத்து, குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, மாணவர்களின் கல்விக் கடன் ரத்து, விவசாயக் கடன்கள் தள்ளுபடி போன்ற பல்வேறு வாக்குறுதிகளை அளித்த நிலையில் 99 சதவிகிதம் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை.

தற்பொழுது தமிழ்நாட்டில் உள்ள ஆட்சியாளர்களைப் பொருத்தவரை எப்படி சம்பாதித்துக் கொள்ளலாம், எப்படி எதிர்க்கட்சிகளை அடக்கலாம் என்ற நோக்கில் தான் செயல்பட்டு வருகிறார்கள். இந்த 18 மாதங்களில் ஒரு குடும்பத்திலிருந்து ரூ.3000 பொதுமக்களிடமிருந்து சுரண்டுகின்ற அரசாக இந்த அரசு உள்ளது

பாஜக மாநிலத் தலைவர், அண்ணாமலை ரூ.3 1/2 லட்சம் வாட்ச் கட்டினால் என்ன? ரூ.5 லட்சம் வாட்ச் கட்டினால் என்ன? என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்பொழுது உள்ள பல்வேறு விலை உயர்வை மறைப்பதற்காகவே இவ்வாறு பேசி வருகிறார்.

அதேபோல் அதிமுக கட்சியில் என்ன பிரச்னையாக இருந்தாலும் திமுகவிற்கு என்ன? இவ்வாறு பேசுவதை நிறுத்திவிட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். கோவை மாவட்டம் தற்போது இத்தனை வளர்ச்சியைக் கண்டுள்ளதற்கு காரணம் இதற்கு முன் இருந்த அதிமுக கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள்.

மக்கள் வரிப்பணத்தை சுரண்டுவதற்காக ஏற்கெனவே பல கோடி செலவழித்து கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை நிறுத்தி, புதிதாக வேறு இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க உள்ளனர். மேலும் திமுகவில் வேறு யாரை வேண்டுமானாலும் அமைச்சராக கொண்டு வந்தால் தங்களுக்கு கவலை இல்லை. எதற்காக அவசர அவசரமாக உதயநிதியை அமைச்சராக்க வேண்டும்’ என கேள்வி எழுப்பினார்.

மேலும் உதயநிதி சினிமா துறையை மிரட்டி அவரது கையில் வைத்துள்ளதாக விமர்சித்தார். மேலும் அவரது Red Giant நிறுவனத்திலிருந்து வெளியில் வந்து மக்களுக்காக உழைக்க வேண்டும் எனத் தெரிவித்தார். பொங்கலுக்கு பொதுமக்களுக்கு ரூ.5000 அளிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார்.

சிப்காட் நிறுவனங்களால் ஏற்கனவே பெருந்துறை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர் எதற்காக கோவை மாவட்டம் அன்னூரில் அவ்வாறான நிறுவனங்களைக் கொண்டு வர வேண்டும் எனவும்; இவ்வாறான செயல்களை தமிழக அரசு செய்ய வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஏழை குடும்பங்களுக்கு தலா 500 ரூபாய்க்கு சிலிண்டர் - ராஜஸ்தான் முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.