கோயம்புத்தூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 250க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு திருமாவளவனுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகாண்ட பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், "திருமாவளவன் இந்து மதத்தை இழிவு படுத்தி வருகிறார். இந்து தர்ம நூலிலும் திருமாவளவன் சொன்ன கருத்துக்கள் சொல்லப்படவில்லை. ஆங்கிலேயர்கள் மதமாற்றம் செய்ய எழுதிய நூலில் இருப்பதை அவர் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தி வருகிறார்.
தமிழகப் பெண்களின் கோபத்தை பாஜக பிரதிபலிக்கிறது. குஷ்பூ உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டது வேதனையைளிக்கிறது. மனுஸ்மிருதி விவாதம் செய்யும் விஷயமே அல்ல, இவர் சொல்வது எவ்வித மனு ஸ்மிருதியிலும் இல்லை" என்றார்.
இதையும் படிங்க: நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாட்டுக் கொடி ஏற்றுங்கள்: சீமானின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!