ETV Bharat / state

யானைகளை படம் எடுக்கும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்!

கோவை: ஆணைகட்டி கங்கா சேம்பர் பகுதியில் சுற்றித் திரியும் யானை கூட்டங்களை பின்தொடர்ந்து புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

யானைக்கூட்டம்
author img

By

Published : May 2, 2019, 7:14 PM IST

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் தற்போது கடுமையான வறட்சி நிலவி வருவதால், அந்த பகுதியில் உள்ள யானைகள் கூட்டம் கூட்டமாக அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீரைத் தேடி படையெடுக்கின்றன.

குறிப்பாக மாங்கரை, ஆணைகட்டி உள்ளிட்ட வனப்பகுதியில் உள்ள சாலையோரங்களில் யானைகள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதை அந்த பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள், ஆபத்தை உணராமல் யானைகளுக்கு அருகில் சென்று செல்ஃபோன் மூலம் படமெடுக்கின்றனர்.

இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் கொடுத்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், யானை கூட்டங்களுக்கு அருகில் சென்று புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சு.சீனிவாசன்.    கோவை

கோவை ஆனைகட்டி கங்கா சேம்பர் பகுதியில் நேற்று மாலை தண்ணீர் குடிக்க யானை கூட்டம் வர அதை சுற்றுலா வந்த பொது மக்கள் வனப் பகுதிக்குள் சென்று யானைகளை புகைப்படம் எடுத்து ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்...

கோவை வனப்பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் நீருக்காக  அருகிலுள்ள கிராமங்களில் புகுவது வாடிக்கையாக உள்ளது மேலும் ஆனைகட்டி மற்றும் மாங்கரை வனப் பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுவதால் அங்கு இருந்து வெளியேறும் யானைகள் அருகில் உள்ள செங்கல் சூளைகளில் தண்ணீர் குடிக்க வருவது நாள்தோறும் தொடர்கிறது அவ்வாறு வரும் யானைகளை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் புகைப்படம் எடுப்பதும் வீடியோ எடுப்பது என ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை இந்நிலையில் நேற்று மாலை ஆனைகட்டி அருகே
 தண்ணீருக்காக  கங்கா சேம்பர்  வளாகம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிக்கு தண்ணீர் குடிக்க யானை கூட்டம் வந்துள்ளது. அப்போது ஆனைகட்டி _கோவை பிரதான  சாலையை கடக்க முடியாத வகையில் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு செல்போன் மூலம் புகைப்படம் எடுக்கத் துவங்கினர் இதனால் அந்த யானை கூட்டம் அங்கிருந்து மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பியது அப்போது அங்கிருந்த வாகன ஓட்டிகளில் பெரும்பாலானோர் யானையைப் பின்தொடர்ந்து வனப்பகுதிக்குள் சென்று யானையை புகைப்படம் எடுத்தனர் இதை அறிந்த அந்த வழியாக சென்ற மற்றொரு வாகன ஓட்டி ஒருவர் அவர்களை  எச்சரிக்கும்  வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது ஆனைகட்டி மாங்கரை சாலையில் வனத்துறையினர் காலை மாலைவேளைகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்....

Video in ftp
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.