கோவையில் இரண்டு முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மாணவர்கள் பயன்படுத்திய உணவகத்தினை மூட கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
உணவகத்தில் பணியாற்றும் சமையலர்கள், மருத்துவ மாணவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் விடுமுறையில் சென்றதால் இந்த முடிவினை மருத்துவமனை நிர்வாகம் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து விடுதியில் தங்கியுள்ள முதுகலை மருத்துவ மாணவர்கள், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையர் அசோகனுக்கு முதுகலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதில், ‘கரோனா பாதிப்பு காரணமாக உணவு, குடிநீர் தேவைகள் துண்டிக்கப்பட முடிவு செய்திருப்பதைத் திரும்ப பெற வேண்டும். அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை எனில் மருத்துவ மாணவர்களின் வழக்கமான பணிகள் மேற்கொள்வதில் பாதிப்பு ஏற்படும். உணவு, தண்ணீர் கிடைக்க தேவையான மாற்று ஏற்பாடுகளை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் செய்ய வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளனர்.
![மாணவர்களின் கடிதம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-05-medical-hostel-issue-7208104_13042020230904_1304f_1586799544_105.jpg)
இது குறித்து மருத்துவமனை முதன்மையர் அசோகனை தொடர்புகொண்டு கேட்க முயன்றபோது செல்ஃபோன் அழைப்பை அவர் ஏற்கவில்லை. மருத்துவம் பார்க்கும் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு கரோனா வந்ததையடுத்து மருத்துவமனை நிர்வாகம் எடுத்துள்ள இந்த முடிவு மற்ற அரசு மருத்துவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகத்தை பார்வையிட்ட அமைச்சர்