ETV Bharat / state

கோவை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையால் உயிரிழந்த விவகாரம் - டீன் விளக்கம்! - Dialysis

கோவை அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால் தனது மகன் உயிரிழந்து விட்டதாக நோயாளியின் தந்தை குற்றம் சாட்டிய நிலையில், இதைத்தொடர்ந்து அரசு மருத்துவமனை டீன் விளக்கமளித்துள்ளார்.

dialysis
டயாலிசிஸ் சிகிச்சை உயிரிழந்த விவகாரம் டீன் விளக்கம்
author img

By

Published : Jul 21, 2023, 1:32 PM IST

டயாலிசிஸ் சிகிச்சையால் உயிரிழந்த விவகாரம் டீன் விளக்கம்

கோயம்புத்தூர்: தாராபுரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ்- காளியம்மாள் தம்பதியினர். இவர்களின் மகன் ராஜேஷ் குமார்(38), கோவை அரசு மருத்துவமனையில் கடந்த புதன்கிழமையன்று டயாலிசிஸ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (ஜூலை 20) அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது உயிரிழப்புக்கு அரசு மருத்துவமனையே காரணமே என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அரசு மருத்துவமனையில் மருந்துகளை வெளியில் வாங்கி கொள்ளவும் என மருத்துவர்கள் கூறியதாகவும், லஞ்சம் கேட்பதாகவும், செவிலியர்கள் முறையாக நோயாளிகளை கவனித்து கொள்வதில்லை எனவும் ராஜேஷ்குமாரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்; ராஜேஷ்குமார் கிட்னியின் செயல்திறன் மோசமாக தான் இருந்ததாகவும், திசுக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், நீண்ட நாட்களாகவே அவருக்கு பாதிப்பு இருந்ததால் அவருக்கு நீண்ட கால டயாலிசிஸ் தேவைப்படும் நிலை இருந்தாகவும், ஏற்கனவே 8 முறை டயாலிசிஸ் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், கோவை அரசு மருத்துவமனைக்கு கடந்த 5 ஆம் தேதி தான் முதலில் சிகிச்சைக்கு அவர் வந்ததாகவும் அவருக்கு ஜெனிடிக் பரிசோதனை செய்தபோது ஜீன்கள் மோசமாக இருந்ததாக தெரிவித்தார். மேலும், இந்த பரிசோதனை செய்ய அதிக செலவு ஆகும் என்பதால் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளித்ததாகவும், அவருக்கு சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்ததாக கூறினார்.

இங்கு அவருக்கு அதிக அக்கறையுடன் தான் சிகிச்சை அளித்ததாகவும், அவர் வியாதிகளால் தான் இறந்ததாகவும் தெரிவித்த அவர் சிகிச்சை முறையில் எந்த தவறும் இல்லை என்றார். மேலும், இறந்தவரின் குடும்பத்திற்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

மேலும், இங்கு மருந்துகளை வெளியில் வாங்க கூறுவது இல்லை எனவும் லஞ்சம் யார் கேட்டது எனக் கூறினால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், ஸ்கேன் செய்வதற்கு 500 ரூபாய் கட்டணம் என்பது நடைமுறையில் இருப்பது தான் எனவும் மருந்து தட்டுப்பாடு ஏதேனும் இருந்தால் துறைத் தலைவர்கள் தரப்பில் உரிய தகவல் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், ராஜேஷ்க்கு குணப்படுத்தும் வகையிலான நோய் இல்லை என தெரிவித்த அவர் 50 வயதிற்கு மேல் வரும் நோய் 35 வயதிலேயே அவருக்கு வந்து விட்டதாகவும் அதுமட்டும் இன்றி இணை நோய்கள் இருந்ததாகவும் கூறினார்.

இதனைத்தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் எமர்ஜென்சி என்றால் உடனடியாக எடுக்கப்படுவதாகவும், Elective cases என்றால் வேறு நாட்கள் குறிப்பிட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் மருத்துவமனை பணியாளர்களுக்கு பொதுவான ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கோவை அரசு மருத்துவமனையில் ஏதேனும் லஞ்ச முறைகேடுகள் நடைபெற்றால் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்க ஏதுவாக தொலைபேசி எண்களுடன் கூடிய சுவரொட்டிகள் தற்போது ஒட்டப்பட்டுள்ளதாகவும், இனி மருத்துவமனை நிர்வாகத்திடமும் நேரடியாக புகார் அளிக்கும் வகையில், தொலைபேசி எண்களுடன் கூடிய சுவரொட்டிகள் ஒட்டப்படும் எனவும் தெரிவித்தார். எந்த குற்றாச்சாட்டாக இருந்தாலும் அது நிர்வாகத்தின் கவனத்தில் கொண்டுவரப்படும் போது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தரமான மருத்துவ சிகிச்சை வழங்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலர் சரவண பிரியா மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Raigad landslide: நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு - தேடுதல் வேட்டை தீவிரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.