ETV Bharat / state

மாவட்ட குழு தலைவராக அதிமுகவைச் சேர்ந்தவர் போட்டியின்றி தேர்வு - மாவட்ட ஊராட்சித் தலைவராக சாந்திமதி வெற்றி பெற்றார்

கோவை: சூலூர் ஏழாவது வார்டு மாவட்ட கவுன்சிலரான அதிமுகவைச் சேர்ந்த சாந்தி போட்டியின்றி மாவட்ட குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மாவட்ட ஊராட்சித் தலைவராக பதவியேற்ற சாந்திமதி
மாவட்ட ஊராட்சித் தலைவராக பதவியேற்ற சாந்திமதி
author img

By

Published : Jan 11, 2020, 4:33 PM IST

கடந்த மாதம் 27, 30ஆகிய தேதிகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் மூலம் மாவட்ட தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது.

இதில் மாவட்ட குழு தலைவராக சூலூர் ஒன்றிய 7ஆவது வார்டு சாந்திமதி யாரும் மனு தாக்கல் செய்யாத நிலையில் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. அதிமுக உறுப்பினர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர்

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ராசாமணி, தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி இன்று மாவட்ட குழு தலைவர், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்களுக்கான தேர்தல் நடைபெற்றுவருகிறது.

இதில் எவ்வித போட்டியுமின்றி சாந்திமதி மாவட்ட குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், துணை தலைவருக்கான மறைமுகத் தேர்தலானது மதியம் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

செய்தியாளர்களை சந்தித்த சாந்திமதி

அதன்பின் பேசிய சாந்திமதி, முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் நல்லாசியுடன் இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார். மேலும், மக்களுக்கு அனைத்து நன்மைகளையும் செய்து கொள்வேன் என்று உறுதி கூறினார்.

இதையும் படிங்க: மறைமுக தேர்தல்: திமுக உறுப்பினர் போட்டியின்றி தேர்வு

Intro:மாவட்ட ஊராட்சித் தலைவராக திருமதி சாந்திமதி வெற்றி பெற்றார்Body:கோவை சூலூர் ஏழாவது வார்டு மாவட்ட கவுன்சிலர் போட்டியிட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி சாந்தி மாவட்ட குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த மாதம் 27, 30 ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் நடந்து மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் மூலம் மாவட்ட தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட குழு தலைவராக சூலூர் ஒன்றிய 7 வது வார்டு திருமதி சாந்திமதி யாரும் மனு தாக்கல் செய்யாத நிலையில் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

அவருக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு அதிமுக உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி இன்று மாவட்ட குழு தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்கள் காண அதிமுக தேர்தல் நடைபெற்று வருகிறது தெரிவித்தார். அதில் எந்தவித போட்டியும் என்று திருமதி சாந்தி மதி மாவட்ட குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார் மேலும் துணை தலைவருக்கான மறைமுகத் தேர்தலானது மதியம் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்பின் பேசிய சாந்திமதி முதலமைச்சர் எடப்பாடி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் நல்லாசியுடன் இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார் மக்களுக்கு அனைத்து நன்மைகளையும் செய்து கொள்வேன் என்று உறுதி கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.