ETV Bharat / state

கோவை மாநகர காவல்துறை நடத்திய கிரிக்கெட் போட்டிகள் நிறைவு - வென்ற பொதுமக்கள் அணி - NMS Global cricket team

கோவை மாநகர காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டிகள் முடிவுற்ற நிலையில், பொதுமக்கள் அணியினர் கோப்பையைக் கைப்பற்றினர்.

கோவை மாநகர காவல்துறை நடத்திய கிரிக்கெட் போட்டி நிறைவு

author img

By

Published : Oct 10, 2022, 11:24 AM IST

Updated : Oct 10, 2022, 11:36 AM IST

கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுரைப்படி, 'காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவை வளர்க்கவும், போதைப்பொருட்களை ஒழிக்கவும் மற்றும் போக்குவரத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கோவை மாநகர காவல் துறையும் தனியார் நிறுவனமும் இணைந்து கிரிக்கெட் போட்டியை நடத்தியது. இப்போட்டிகள் கடந்த 1ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது.

இந்தப்போட்டியில் பொதுமக்கள் சார்பில் 32 அணிகள், கோவை மாநகர காவல்துறை சார்பில் ஏழு அணிகள், கோவை மாநகர ஊர்க்காவல் படை சார்பில் இரண்டு அணிகள், கோவை மாநகர காவல் அலுவலக அமைச்சு பணியாளர்கள் சார்பில் ஒரு அணி, கோவை மாவட்ட காவல்துறை சார்பில் இரண்டு அணிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் ஒரு அணி மற்றும் மாநகராட்சி அலுவலகம் சார்பில் மூன்று அணிகளும் பங்கு பெற்று விளையாடின.

இந்த நிலையில் இதன் இறுதிப்போட்டி நேற்று (அக் 9) பிஎஸ்ஜி கல்லூரி ஐஎம்எஸ் ‘ஏ’ மைதானத்தில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பிரிவில் வென்ற என்எம்எஸ் குளோபல் அணியும் காவல் துறை அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த காவல் துறை அணி, நிர்ணயிக்கப்பட்ட எட்டு ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 59 ரன்கள் எடுத்திருந்தது.

இதன்பின்னர் விளையாடிய பொதுமக்கள் அணி 6.1 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்து, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தொடர்ந்து வெற்றி பெற்ற என்எம்எஸ் குளோபல் அணிக்கு 25,000 ரூபாய் மற்றும் வெற்றிக்கோப்பையை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் வழங்கினார்.

போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி எடுத்த காவலர்கள்
போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி எடுத்த காவலர்கள்

மேலும் ஆட்ட நாயகன் விருது அணியின் அஜித் என்பவருக்கு வழங்கப்பட்டு, 3,000 ரூபாய் பரிசுத் தொகையும் கோப்பையும் வழங்கப்பட்டது. அதேபோல் காவல்துறை பிரிவுகள் சார்பில் நடைபெற்ற போட்டியில் முதல் பரிசை, கோவை மாவட்ட காவல்துறை டிஸ்டிக்-1 அணி தட்டிச்சென்றது.

இவர்களுக்கு 10,000 ரூபாய் பரிசுத்தொகையும் கோப்பையும் வழங்கப்பட்டன. இதில் ஆட்டநாயகனாக காவலர் நிதிஷ் தேர்வு செய்யப்பட்டார். மேலும் இப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து அணிகளின் வீரர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கிரிக்கெட் போட்டி நிறைவு விழாவில் நடிகர் ரோபோ சங்கர்

மேலும் கோவை மாவட்ட ஆட்சியர், கோவை மாநகராட்சி ஆணையாளர் உள்பட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர், இந்நிகழ்வில் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்து உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: கோவை அருகே லஞ்சம் பெற்ற ஊராட்சி தலைவி கைது

Last Updated : Oct 10, 2022, 11:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.