ETV Bharat / state

கோவையில் அதிகரிக்கும் கரோனா: இன்று 434 பேருக்கு தொற்று உறுதி - கோவையில் அதிகரிக்கும் கரோனா தொற்று

கோயம்புத்தார்: மாவட்டத்தில் இன்று (அக். 06) ஒரேநாளில் 434 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Corona in coimbatore
Corona in coimbatore
author img

By

Published : Oct 6, 2020, 8:29 PM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தில் முன்பு இருந்ததைவிட, கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசும், மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இருப்பினும், கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கோவையில் இன்று (அக். 06) 434 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 ஆயிரம் ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 470 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நான்காயிரத்து 837 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்

கரோனாவல் சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில், 494 பேர் இன்று குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். இதன்மூலம் கோவையில் இதுவரை கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. தினம்தோறும் சராசரியாக 300 முதல் 400 வரை, புதிய கரோனா நோயாளிகள் கண்டறியப்படுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: கரோனா: ஐஓபி வங்கி மூடல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.