தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இத்தொற்று பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில் இன்று (செப்.13) கோவை மாவட்டத்தில் புதிதாக 490 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,156ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் 18,308 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை சிகிச்சைப் பலனின்றி 353 பேர் உயிரிழந்தனர்.