கரோனா பரவலைத் தடுத்திட வேண்டி இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
அத்தியாவசிய தேவைகளான பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மருந்து கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடைகளில் கூட்டமாக மக்கள் நிற்காமல் மூன்று அடி தூரத்திற்கு ஒருவராக நின்று பொருட்கள் வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்காக ஒவ்வொரு கடைகள் முன் கோடுகள் வரையப்பட்டுள்ளன.
இதையடுத்து, வால்பாறை வட்டாட்சியர் ராஜன், கிராம நிர்வாக அலுவலர் விஜய் அமிர்தராஜ், காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
சாலைகளில் இருச்சக்கர வாகனங்கள், கார்களில் வருபவர்களை கண்டித்து திருப்பி அனுப்பினர். வீடுகளுக்கு வெளியே கூட்டமாக நின்றவர்களை வீட்டுக்குள் செல்ல அறிவுறுத்தினர்.
மேலும் காய்கறி கடைகளில் கூட்டமாக நின்றவர்களை அழைத்து அறிவுரை வழங்கியதோடு கடை உரிமையாளர்கள் விதிகளை கடைபிடிக்காவிட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரித்தனர்.
இதையும் படிங்க: சாலையில் சுற்றித்திரிந்த பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி!