கோயம்புத்தூரில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இன்று (ஜூன் 9) பெண் ஒருவர் உள்பட மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கணுவாய் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண்ணுக்கு, மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கரோனா தொற்றுடன் மும்பையில் இருந்து வந்த பயணியிடம் தொடர்பில் இருந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேபோல, சென்னை மயிலாப்பூரில் இருந்து சாலை வழியாக கோவை வந்த வடவள்ளியைச் சேர்ந்த 27 வயது ஆணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
போத்தனூரைச் சேர்ந்த 49 வயது ஆண் காது, மூக்கு, தொண்டை பிரச்னை காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மூன்று பேரும் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவையில் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி! - கோயம்புத்தூரில் கரோனா தொற்று உறுதி
கோயம்புத்தூர்: இன்று ( ஜூன் 9) மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.