ETV Bharat / state

கோவையில் கரோனாவிலிருந்து மீண்ட 12 பேர் வீடு திரும்பினர்! - coronavirus affected person discharge at coimbatore

கோவை: கரோனா பாதிக்கப்பட்ட 127 பேரில் 26 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று ஒரேநாளில் 12 பேர் வீடு திரும்பினார்கள்.

corona
corona
author img

By

Published : Apr 17, 2020, 11:38 AM IST

கோவையில் கரோனா வைரஸ் பாதிப்புடன் 127 பேர் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், மருத்துவர், 10 மாதக் குழந்தை உள்ளிட்ட 14 பேர் குணமடைந்து கடந்த வாரம் வீடு திரும்பினர். இந்த நிலையில் நேற்றிரவு புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், ஆனைமலை பகுதிகளைச் சேர்ந்த 12 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.

கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட 12 பேரை மருத்துவர்கள், செவிலியர் கைதட்டி, பாராட்டி அனுப்பிவைத்தனர். வருங்காலங்களில் 28 நாள் அவர்களைத் தனிமைப்படுத்தி இருக்குமாறும், பொது இடங்களில் அதிகமாகச் செல்லக் கூடாது என்றும் மருத்துவர்கள் அவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

கோவை ஈ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 127 பேரில் தற்போதுவரை 26 பேர் குணமடைந்துள்ளனர். 101 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், விரைவில் இவர்களும் வீடு திரும்புவார்கள் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கோவையில் கரோனாவிலிருந்து மீண்ட 12 பேர் வீடு திரும்பினர்

கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால், பொதுமக்கள் மத்தியில் கரோனா நோய்த்தொற்று குறித்து பீதி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனாவை வென்று வீடு திரும்பிய ஐவர்; மகிழ்ச்சிகர செய்தி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.