கோவை மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு இடங்களில் கரோனா பாதித்த பகுதிகளை அடைத்து அங்குள்ளவர்களை தனிமைப்படுத்தி வருகின்றனர்.
அதுபோல் மக்கள் அதிகமாக பொருள்களை வாங்கும் பகுதியான காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள பிரபல தனியார் நகை கடை(GRD) ஊழியர் ஒருவருக்கு கரோனா இருப்பது உறுதியானதால் அந்தக் கடை மூடபட்டது.
மேலும் அங்குள்ள 3,4,11 ஆகிய தெருக்கள் உள்ள தனியார் மொபைல் கடைகளில் (சென்னை மொபைல்ஸ்) உள்பட மொபைல் சர்வீஸ் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு கரோனா பாதிப்பு தென்பட்டதால், அந்த தெருக்களும் அடைக்கப்பட்டதோடு, பொதுமக்கள் அவ்வழியாக செல்ல தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
கோவையில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: வெளியூர்களிலிருந்து 14,600 பேர் நெல்லைக்கு வருகை