கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், ஒரு வாரத்திற்கு முன்பு சொந்த ஊரான விழுப்புரத்திற்குச் சென்றுவிட்டு மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார். அப்போது, அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தற்போது அவர் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், அவர் பணியாற்றிய பிசியோதெரபி வார்டு முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்துள்ளனர். இதுமட்டுமின்றி அவருடன் வார்டில் பணிபுரியும் 14 பேருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் விரைவில் வெளியேறும் எனக் கூறப்பட்டுள்ளது.