கோவையில் இன்று மேலும் 227 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 458 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 216 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 685 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஏழு பேர் உயிரிழந்துள்ள நிலையில் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.