ETV Bharat / state

கோவையில் இன்று 387 பேருக்கு கரோனா தொற்று உறுதி

கோயம்புத்தூர்: மாவட்டத்தில் ஒரே நாளில் 387 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 141ஆக அதிகரித்துள்ளது.

Corona update
Corona update
author img

By

Published : Aug 24, 2020, 8:42 PM IST

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில், கோவையில் இன்று (ஆக. 24) 387 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 141ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் ஏழு பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 244ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவர்களில், 338 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கோவையில் இதுவரை கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 754ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த மே மாத இறுதியில், 146 பேருக்கு மட்டும் கரோனா பாதிப்பு இருந்தது. தற்போது தொற்று எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. கடந்த ஒரு மாதமாக கரோனா வைரஸ் சென்னையைப் போல் வேகமாகப் பரவி வருகிறது.

தினம்தோறும் சராசரியாக 300 முதல் 400 வரை, புதிதாக கரோனா நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். நாளுக்கு நாள் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இ-பாஸ் தளர்வு சுகாதாரத் துறைக்கு சவாலான விஷயம்' - அமைச்சர் விஜயபாஸ்கர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.