தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் நான்கு நாள்களே உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியாற்றும் அரசுப் பணியாளர்கள், மையத்திற்குள் செல்லும் கட்சி முகவர்கள், காவலர்கள், இதர பணியாளர்கள் அனைவரும் 72 மணி நேரத்திற்கு முன் கரோனா பரிசோதனை கட்டாயமாகச் செய்திருக்க வேண்டும் அல்லது தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தால் நல்லது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று (ஏப். 29) கோயம்புத்தூரில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குச் செல்லும் அரசுப் பணியாளர்கள், கட்சி முகவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
கோயம்புத்தூரிலுள்ள 10 தொகுதிகளின் மைய முகவர்கள், எண்ணிக்கை நாளில் பணியாற்ற இருக்கும் அரசுப் பணியாளர்கள் அனைவருக்கும் அந்தந்தத் தொகுதிகளுக்குள்பட்ட பல்வேறு இடங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
பரிசோதனை செய்யக்கூடிய மையத்திற்கு தகுந்த இடைவெளியைப் பின்பற்றி அனைவரும் பரிசோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா இல்லைனு சான்றிதழா... இல்ல முகவர்கள் பட்டியலா - கேள்வியெழுப்பும் மம்தா