கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சி சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சார் ஆட்சியர் வைத்தியநாதன் கலந்துகொண்டு தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் காந்திராஜ், வட்டாச்சியர் தணிகைவேல் முன்னிலை வகித்தனர்.
அப்போது, “கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முறைகள், கை கழுவும் முறைகள் குறித்து சுகாதாரத்துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் செயல்விளக்கம் அளித்தனர். தும்மல், இருமல் வரும்போது கைக்குட்டை கொண்டு மூடிக் கொள்ள வேண்டும்.
சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து கரோனா பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் பொள்ளாச்சி நகராட்சிப் பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கரோனா குறித்து விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகள் வைப்பதாகவும், தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதிகளில் வாகனங்களுக்கு கிருமி நாசினிகள் தெளிப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம்