தமிழ்நாட்டில் இன்று (செப்.28) புதிதாக 5 ஆயிரத்து 589 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து, 30 ஆயிரத்து, 708ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில் இன்று கோவை மாவட்டத்தில் புதிதாக 587 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 30,915 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் இன்று மாவட்டத்தில் 459 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,374 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி 424 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.