தமிழ்நாட்டில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசுத் தடுப்பு நடவடிக்கையாகப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக இரவு 10 மணிமுதல் காலை 4 மணி வரையிலான இரவு நேர ஊரடங்கு நேற்றுமுதல் (ஏப். 20) அமலுக்கு வந்தது. இதனையொட்டி இரவு 9 மணி அளவில் கோவையில் உள்ள முக்கியச் சாலைகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் ஒலிபெருக்கி மூலம் கடைகளை அடைக்குமாறு அறிவுறுத்தினர்.
இரவு நேர ஊரடங்கு காரணமாக அவிநாசி சாலை, திருச்சி சாலை, பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காட்சியளித்தன.
இதையும் படிங்க: டில்லியில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசிடம் வலியுறுத்தல்