கோவை பீளமேடு பகுதியில் இயங்கி வரும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் இரண்டு பேருக்கு கடந்த வாரம் கரோனா தொற்று உறுதியான நிலையில், இரு நாள்கள் வங்கி மூடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கடந்த நான்கு தினங்களுக்கு முன் வங்கியானது மீண்டும் செயல்பட தொடங்கிய நிலையில், இன்று (மார்ச் 24) மேலும் இரண்டு பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மீண்டும் மூடப்பட்டது. எனவே வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள ஆவாராம்பாளையம், காளப்பட்டி கிளையை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஏப்ரல் முதல் இணை நோய் இல்லாதவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும்!