ETV Bharat / state

கோவை நகைக்கடை ஊழியர்களுக்கு கரோனா! - Corona for Coimbatore jewelery workers

கோவையில் பிரபல நகைக்கடை ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, கடை பூட்டப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

பிரபல நகைக்கடை ஊழியர்களுக்கு கரோனா
பிரபல நகைக்கடை ஊழியர்களுக்கு கரோனா
author img

By

Published : Jul 9, 2020, 11:29 PM IST

கோவை, காந்திபுரம் 100 அடி சாலையில் பிரபல நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 50-க்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தற்போது இங்கு பணியாற்றும் ஊழியர்கள் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் அங்கு சென்று கடைக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் நகைகள் அனைத்தும் பாதுகாப்பு அறைக்கு மாற்றப்பட்டு, கடையின் கதவுகள் சாத்தப்பட்டது. அதனைதொடர்ந்து நகை கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டதோடு, அங்கு பணியாற்றிய மற்ற ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு, ஊழியர்கள் வெளியே செல்லக்கூடாது எனவும், தனிமையில் இருக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் 100 அடி சாலையில் உள்ள பிரபல செல்போன் கடையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அரசு அலுவலர்களுக்குக் கரோனா- தற்காலிகமாக மூடப்பட்ட வட்டாட்சியர் அலுவலகம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.