கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 12) புதிதாக 428 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 665ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வந்த 495 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 754ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆறு பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 346ஆக உயர்ந்துள்ளது.